625
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
625 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 625 DCXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 656 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1378 |
அர்மீனிய நாட்காட்டி | 74 ԹՎ ՀԴ |
சீன நாட்காட்டி | 3321-3322 |
எபிரேய நாட்காட்டி | 4384-4385 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
680-681 547-548 3726-3727 |
இரானிய நாட்காட்டி | 3-4 |
இசுலாமிய நாட்காட்டி | 3 – 4 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 875 |
யூலியன் நாட்காட்டி | 625 DCXXV |
கொரிய நாட்காட்டி | 2958 |
ஆண்டு 625 (DCXXV) யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]பைசாந்தியப் பேரரசு
[தொகு]- பைசந்தீனிய-சசானிது போர்: பைசாந்தியப் பேரரசர் எராக்கிலியசு பேரரசர் தனது படைகளை கோர்டூன் மலைகளை ஊடுருவி மேர்கு நோக்கிச் சென்றார். ஏழு நாட்களுக்குள் அரராத் மலையைத் தாண்டிச் சென்று, டைகிரிசு ஆற்றின் மேற்பகுதியில் இருந்த அமீதா, சில்வான் கோட்டைகளைக் கைப்பற்றினார்.[1] மேற்கு மெசொப்பொத்தேமியாவில் பாரசீக இராணுவம் மேற்குப்பக்கமாக புறாத்து ஆற்றைக் கடந்து பின்வாங்கின.
- பைசாந்தியப் பேரரசர் எராக்கிலியசு சாருசு ஆற்றுப் பக்கமாக இடம்பெற்ற போரில் வெற்றி பெற்றார்.
பிரித்தானியா
[தொகு]- நோர்தம்பிரியாவின் எட்வின் மன்னர் கென்ட் நகர ஏத்தல்பூர் என்ற கிறித்தவரைத் திருமணம் புரிந்தார்.
ஆசியா
[தொகு]- சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி பாரசீகத்தின் இரண்டாம் கோசுராவு மன்னரின் தூதர்களை பாதமியில் (தென்னிந்தியா) சந்தித்தார்.
- அவனி சூளாமணியை அடுத்து செழியன் சேந்தன் பாண்டிய மன்னனாக முடிசூடினான். 640 ஆம் ஆண்டு வரை இவன் பதவியில் இருந்தான்.
சமயம்
[தொகு]- மார்ச் 19 - உஹத் யுத்தம்: மெக்கா நகரவாசிகளுக்கும் முகம்மது நபியின் மதீனா படையினருக்கும் போர் இடம்பெற்றது. நபியின் படையினர் பின்வாங்கினர்.
- அக்டோபர் 25 - ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த திருத்தந்தை ஐந்தாம் பொனிபேசு உரோம் நகரில் இறந்தார். முதலாம் ஒனோரியசு 70வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kaegi, Walter Emil (2003), "Heraclius: Emperor of Byzantium", Cambridge University Press, p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-81459-6