1876
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1876 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1876 MDCCCLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1907 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2629 |
அர்மீனிய நாட்காட்டி | 1325 ԹՎ ՌՅԻԵ |
சீன நாட்காட்டி | 4572-4573 |
எபிரேய நாட்காட்டி | 5635-5636 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1931-1932 1798-1799 4977-4978 |
இரானிய நாட்காட்டி | 1254-1255 |
இசுலாமிய நாட்காட்டி | 1292 – 1293 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 9 (明治9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2126 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4209 |
1876 (MDCCCLXXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 31 - அனைத்து ஆதிகுடிகளும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்ல வேண்டுமென ஐக்கிய அமெரிக்கா கட்டளை இட்டது.
- பெப்ரவரி 3 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- பெப்ரவரி 19 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (The Jaffna Catholic Guardian) இதழ் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- மார்ச் 7 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் (#174,465) பெற்றார்.
- மார்ச் 10 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் வெற்றிகரமாக உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியது: "Mr. Watson, come here, I want you."
- ஏப்ரல் 16 - பல்கேரியாவில் ஒட்டோமான் இராச்சியத்திற்கெதிராக புரட்சி வெடித்தது.
- ஏப்ரல் 28 - இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
- ஜூலை 1 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
- ஜூலை 2 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
- அக்டோபர் 21 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
- அக்டோபர் 26 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பக்கிங்ஹாம் அரசரால் எடுக்கப்பட்டது.
- அக்டோபர் 31 - இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற சூறாவளியினால் (cyclone) 200,000 பேர் வரையில் இறந்தனர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- "The Adventures of Tom Sawyer" நூல் வெளியிடப்பட்டது.
- அமெரிக்க வேதியியல் குமுகம் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 20 - கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936)
- ஜூலை 15 - மறைமலை அடிகள்
- ஆகஸ்ட் 7 - மாத்தா ஹரி, நாசி உளவாளி (இ. 1917)
- ஆகஸ்ட் 27 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1954)
- டிசம்பர் 25 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)