சாலியோடைட்டு
சாலியோடைட்டுSaliotite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Li,Na)Al3(AlSi3O10)(OH)5 |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது முதல் வெள்ளை வரை |
படிக அமைப்பு | ஒற்றைசரிவச்சு |
பிளப்பு | சரியான பிளவு {001} இல் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 - 3 |
மிளிர்வு | முத்து போன்ற |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.75 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.580 - 1.590 nβ = 1.580 - 1.590 nγ = 1.590 - 1.600 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010 |
2V கோணம் | 30° to 50° |
மேற்கோள்கள் | [1][2] |
சாலியோடைட்டு (Saliotite) என்பது (Li,Na)Al3(AlSi3O10)(OH)5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1] சிமெக்டைட்டு குழுவிலுள்ள பைல்லோ சிலிக்கேட்டுகள் வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. குக்கீட்டு மற்றும் பாராகோனைட்டு ஆகிய கனிமங்களின் வரிசைப்படுத்தப்பட்ட 1:1 விகிதத்தில் படுகைக்களுக்கு இடையில் மாறி மாறி அமைந்துள்ளது. சரியான பிளவுடன் முத்து போன்ற பளபளப்பும் வெள்ளை நிற கோடுகளையும் கொண்டுள்ளது. இதன் படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பு ஆகும். சாலியோடைட்டின் கடிமத்தன்மை அளவு மோவின் அளவில் 2-3 என மதிப்பிடப்பட்டுள்ளது.[1][2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாலியோடைட்டு கனிமத்தை Sal[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
1994 ஆம் ஆண்டில், எசுப்பானியாவிலுள்ள தன்னாட்சிப் பகுதியான அந்தாலூசியாவின் அல்மேரியா நகரத்தின் வடக்கே உள்ள ஒர் உயர்தர உறுமாறிய பாறைகளின் வெளிப்புறத்தில் சாலியோடைட்டு முதன்முதலில் கண்டுபடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. பிரெஞ்சு புவியியலாளர் பியர் சாலியட்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Saliotite data on Mindat
- ↑ 2.0 2.1 Saliotite data on Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.