பெர்சீவியரன்சு
பெர்சீவியரன்சு தரையுளவி Perseverance Rover | |
---|---|
செவ்வாய் 2020-இன் ஒரு பகுதி | |
பெர்சீவியரன்சு செவ்வாயின் மாதிரிகளை சேகரித்தல் (ஓவியம்) | |
வேறு பெயர்(கள்) |
|
வகை | செவ்வாய் (தரையுளவி) |
தயாரிப்பாளர் | ஜெட் புரொபல்சன் ஆய்வுகூடம் |
தொழினுட்பத் தகவல்கள் | |
நீளம் | 2 மீ |
விட்டம் | 2.7 மீ |
உயரம் | 2.2 மீ |
ஏவுகலன் எடை | 1,025 கிகி |
வலு | 110 W |
பறப்பு வரலாறு | |
ஏவல் நாள் | 30 சூலை 2020, 11:50 ஒசநே[1] |
ஏவல் இடம் | கேப் கேனவரல் |
இறங்கிய நாள் | 19 பெப்ரவரி 2021, 20:55 ஒசநே[2] |
இறங்கிய இடம் | ஜெசிரோ குழி |
மொத்த நேரம் | தரையிறங்கியது முதல் 32767 மணித்தியாலங்கள்[2] |
நாசா செவ்வாய்த் தோரணங்கள் |
பெர்சீவியரன்சு (Perseverance), சுருக்கமாக பெர்சி (Percy) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் செவ்வாய் 2020-திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கோளின் ஜெசிரோ குழியை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தரையுளவி அல்லது ஆய்வூர்தி (Rover) ஆகும். இது ஜெட் புரொப்பல்சன் ஆய்வுகூடத்தினால் தயாரிக்கப்பட்டு 2020 சூலை 30 11:50 ஒ.ச.நே மணிக்கு செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது.[1] இக்கலம் செவ்வாயில் தரையிறங்கியது 2021 பெப்ரவரி 18 20:55 ஒ.ச.நே அளவில் உறுதிப்படுத்தப்பட்டது.[2]
பெர்சீவியரன்சு தன்னுடன் 19 ஒளிப்படக்கருவிகள், இரண்டு ஒலிவாங்கிகள் உட்பட ஏழு புதிய அறிவியல் கருவிகளை எடுத்துச் சென்றுள்ளது.[3] இஞ்சினுவிட்டி என்ற ஒரு சிறிய உலங்கு வானூர்தியையும் பெர்சீவியரன்சு எடுத்துச் சென்றுள்ளது. இவ்வுலங்குவானூர்தி வேறொரு கோளில் இயக்கப்படும் முதலாவது சோதனை-முறையிலான விண்கலமாகும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Launch Windows". mars.nasa.gov. NASA. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ 2.0 2.1 2.2 mars.nasa.gov. "Touchdown! NASA's Mars Perseverance Rover Safely Lands on Red Planet". NASA. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
- ↑ "Mars 2020 Landing Press Kit" (PDF). Jet Propulsion Laboratory. NASA. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Mars 2020 official site at தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)
- யூடியூபில் Mars 2020: Overview (2:58; 27 July 2020; NASA)
- யூடியூபில் Mars 2020: LAUNCH of Rover (6:40; 30 July 2020)
- யூடியூபில் Mars 2020: LAUNCH of Rover (1:11; 30 July 2020; NASA)
- Mars 2020: LANDING of Rover (3:55pm/et/usa, 18 February 2021
- செவ்வாய்க் கோளின் தகவல்