1582
ஆண்டு 1582 (MDLXXXII) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் திருத்தந்தையின் ஆணை ஓலை மூலம் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்காட்டியை எசுப்பானியா, போர்த்துகல், போலந்து-லித்துவேனியா, மற்றும் இன்றைய இத்தாலியின் பெரும் பகுதிகளும் நடைமுறைப்படுத்தின. இந்நாடுகளில் அக்டோபர் 4 வியாழக்கிழமை வரை பழைய யூலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாற்றப்பட்டு கிரெகொரியின் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 9 இற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை டிசம்பர் 20 ஆக மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் யூலியன் நாட்காட்டியையே பின்பற்றி சில ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற்றிக் கொண்டன. உலகம் முழுவதுமான முழுமையான மாற்றம் 1929 இலேயே இடம்பெற்றது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1582 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1582 MDLXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1613 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2335 |
அர்மீனிய நாட்காட்டி | 1031 ԹՎ ՌԼԱ |
சீன நாட்காட்டி | 4278-4279 |
எபிரேய நாட்காட்டி | 5341-5342 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1637-1638 1504-1505 4683-4684 |
இரானிய நாட்காட்டி | 960-961 |
இசுலாமிய நாட்காட்டி | 989 – 990 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 10 (天正10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1832 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3915 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 15 – லிவோனியா, மற்றும் தெற்கு எசுத்தோனியா ஆகிய பகுதிகளை உருசியா போலந்து-இலித்துவேனியாவிடம் இழந்தது.
- பெப்ரவரி 24 – திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்.
- அக்டோபர் 4 – இத்தாலி, போலந்து, ஐபீரிய மூவலந்தீவு ஆகியன அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை 10 நாட்கள் பின்தள்ளி அக்டோபர் 15 ஆக மாற்றி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தின.
- டிசம்பர் 9 – பிரான்சு அடுத்த நாளான திங்கட்கிழமையை டிசம்பர் 20 ஆக அறிவித்து கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- இயேசு சபை மத்தேயோ ரீச்சி சீனாவிற்குள் வர மிங் ஆட்சியாளரால் அனுமதிக்கப்பட்டார்.
- யாழ்ப்பாணத்தின் ஆட்சி புவிராஜ பண்டாரம் என்பவனுக்கு மாறியது.
- கோட்டை இராச்சியத்தின் தர்மபால மன்னன் நாட்டை போர்த்துக்கேயரிடம் ஒப்படைத்தான்.[1]
- யாழ்ப்பாணத்தில் பிரான்சிசுக்கன் தேவாலயத்தைக் கட்டுவதற்கு போர்த்துக்கீசருக்கு யாழ்ப்பாண மன்னன் அனுமதி வழங்கினான்.[1]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- அக்டோபர் 4 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2